குடும்ப தகராறில் பேராசிரியர் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

சென்னை: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(56). இவரது மனைவி கோகிலா(54), இவர்களுக்கு பாண்டியராஜன்(30), சிவராமன்(27), என இரண்டு மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பாண்டியராஜனுக்கு, சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களில் குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சங்கீதா எழுந்து பார்த்தபோது மற்றொரு அறையில் பாண்டியராஜன் தூக்கில்  தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே  அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போரூர் போலீசார்  பாண்டியராஜன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்திந டவடிக்கை எடுக்க வேண்டும் என மருமகள் சங்கீதா மீது பாண்டியராஜன் தாய் கோகிலா போருர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய, விடிய தகராறு நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: