ஆவண மோசடி வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை

பூந்தமல்லி: சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு(58), பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு நுகர்வோரிடம் இருந்து மின் பயன்பாட்டின் தொகைக்கான காசோலை ரூ.66,200 வசூலித்து அதனை தவறாக மதிப்பீட்டாளரின் ரசீதில் வேறு தொகையை பதிவு செய்து முறைகேடு செய்துள்ளார்.

இதுகுறித்து மின்வாரிய இளநிலை பொறியாளர் மத்திய குற்ற பிரிவு, ஆவண மோசடி பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் மின்வாரிய ஊழியர் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பிரபுவுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: