அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி

ஐதராபாத்: அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதில் பஹத் பாசில் கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதையடுத்துதான் இந்த படத்துக்குள் பஹத் பாசில் வந்தார். அவர் கொடூரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் செப்டம்பர் முதல் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த முறை அவர் இப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது. சமீபத்தில் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்போது மீண்டும் புஷ்பா 2வில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் இணைய உள்ளனர். இவர்களுடன் அல்லு அர்ஜுன் நடிப்பதால் படத்துக்கான வியாபாரம் அதிகரிக்கும் என பட தயாரிப்பாளர் நம்புகிறார். இதில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அவர் வாங்குவதை விட அதிக சம்பளம் தரப்படும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: