2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கும் சீனா: இந்தியாவுக்கு அனுமதியில்லை

பீஜிங்: சீனாவில் சர்வதேச விமான சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கான விமான சேவை பற்றி சீனா எதுவும் குறிப்பிடவில்லை. சீனாவில் கொரோனா தொற்றைத் தொடர்ந்து, சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் இந்தியாவிலேயே தங்க வேண்டியதாயிற்று. இதனிடையே, சர்வதேச நாடுகளுக்கு விதித்திருந்த விசா தடையை சீனா கடந்த மாதம் நீக்கியது. இதைத் தொடர்ந்து அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், ஐடி துறையினர் சீனா திரும்பி வருகின்றனர்.

அதே நேரம், சீனா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள் விசா கிடைத்தும் விமான சேவை இல்லாததால் சீனா போக முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்துக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இருப்பினும், அதில் இந்தியாவுக்கான விமான சேவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், இந்தியா-சீனா விமான போக்குவரத்து இழுபறி நிலையில் உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதல் விமான போக்குவரத்து இல்லை. இதுதொடர்பாக ஒன்றிய அரசுபேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: