பைக் புதையும்படி சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

வேலூர்: பைக், ஜீப் புதையும்படி சாலை அமைத்த விவகாரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மேயர் நடவடிக்ைக எடுத்துள்ளார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வேலூர் ேபரி காளியம்மன் கோயில் தெருவில் இரவோடு இரவாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பைக்கின் இருசக்கரங்களும் புதையும் வகையில் சிமென்ட் கலவைகள் போட்டு சாலை அமைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பின்னர், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தசம்பவம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உத்தரவின்பேரில், பணியில் மெத்தனமாக ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், ‘சம்மந்தப்பட்ட கான்ட்ராக்டர் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

Related Stories: