ரூ.3,000 லஞ்சம் கிராம நிர்வாக உதவியாளர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மேல் பாதி பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமியின் கணவர் செல்வராஜ் கடந்த மே மாதம் இறந்தார். இவரது வாரிசு சான்றிதழ் பெற ஜெயலட்சுமியின் தம்பி ரவி ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். அதற்கு கிராம உதவியாளர் முஜிபுர் ரகுமான் (37),  ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுபற்றி  ரவி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் தந்த ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை நேற்று ரவி, முஜிபுர் ரகுமானிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: