பையனூர் ஊராட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

மாமல்லபுரம்: பையனூர் ஊராட்சி சார்பில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஊராட்சி சார்பில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு, பையனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமிதா முத்துக்குமார் தலைமை தாங்கினார். முகாமிற்கு 2 தனியார் கம்பெனிகள் கலந்து கொண்டன. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு  படித்தவர்கள் வேலைக்கு தேர்வு செய்ய தனியார் கம்பெனியை சேர்ந்த துர்க நவீன்குமார் ராயாண்ணா நேர்காணல் நடத்தினார். இந்த, நேர்காணலில் பையனூர், காரணை, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 வரை  நடைபெற்றது.  இந்த நேர்கானலில் தகுதியான 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி ஆணையை நேற்று மாலையே ஊராட்சி தலைவர் சுமிதா முத்துக்குமார் வழங்கினார்.

Related Stories: