பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அடுத்த மணிமங்கலம் போலீசார் கரசங்கால் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 3 இளைஞர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் 3 இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கரசங்கால், அண்ணா தெருவை சேர்ந்த பூணைக்கண் வினோத் (20), ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி பகுதியை சேர்ந்த வாண்டு விஜய் (எ) விஜய் (19), அய்யப்பந்தாங்கல், ஆயில் மில் சாலையைப்சேர்ந்த சூரியமூர்த்தி (18) என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை நடத்தியதில் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 11 சவரன் நகை, 3 பைக், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: