தேவாலய உண்டியல் உடைப்பு

சென்னை: பூந்தமல்லி ட்ரங்க் ரோடு பகுதியில் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்நிலையில், தேவாலயத்துக்கு வழக்கம்போல் நேற்று வந்த நிர்வாகிகள் தேவாலயத்தின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவாலயத்தை பார்வையிட்டனர். மேலும் கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள் கத்தியை விட்டு சென்றுள்ளனர். போலீசார் கத்தியை கைப்பற்றி, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர். கிறிஸ்துவ தேவாலயத்தில் உண்டியல் கொள்ளைபோன சம்பவம் பூந்தமல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: