நடுவானில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய தனியார் விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: கடந்த 15 நாட்களில் 6வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி பயணிகளுடன் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  இந்த விமானத்தில் சுமார் 150 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விமானத்தின் எரிபொருள் டேங்க் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தொடர்ந்து அசாதாரணமாக குறைந்துகொண்டே வந்துள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்து துபாய் நோக்கி பயணம் மேற்கொள்வது சிக்கல் என்பதால் விமானம் பாகிஸ்தான் நோக்கி திருப்பி விடப்பட்டது. அங்குள்ள கராச்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. கடந்த 17 நாட்களில் 6வது முறையாக விமானத்தில் இதுபோன்று கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: