ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி கைது

குந்தி:  ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்திற்கு வெளிமாநிலத்தை சேர்ந்த 8 பொறியியில் மாணவ, மாணவிகள் பயிற்சிக்காக வந்துள்ளனர். கடந்த சனியன்று மேம்பாட்டு துணை ஆணையர் குடியிருப்பில்  மாணவர்களுக்கு இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஐஏஎஸ் அதிகாரி பயிற்சி மாணவி ஒருவர் தனியாக இருப்பதை கவனித்துள்ளார். மாணவியை அதிகாரி பாலியல் துஷ்பிரயோகம்  செய்ததாக தெரிகின்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, குந்தி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்தனர்.

Related Stories: