மருமகள், மகளுக்கு அடி உதை நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை: மாமனார் மீது போலீசில் புகார்

சென்னை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை போலீசில் புகார் கொடுத்துள்ளார். பிரபல தமிழ் திரைப்படமான ‘அண்ணாத்த’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்தவர் போரூர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தனது மாமனார் சரவணவேல் (73), மாமியார் ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதால், தனக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று துணை நடிகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, எனது மாமனார் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். மாமியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்டதை மறைத்து எனக்கு அவரது மகனை திருமணம் செய்து வைத்துவிட்டனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை மாமனாரும், மாமியாரும் கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்றபின் தற்போது புகார் அளித்துள்ளேன். அதுமட்டுமல்ல எனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, துணை நடிகையின் மாமனார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாக உள்ள சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னை தாக்கியதாக மாமனார், மாமியார் மீது துணை நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: