அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்  மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா வரவேற்றார். இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் பதிவு செய்யப்பட்டு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், ஏற்கனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள், இதர உபகரணங்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவர் சான்று, ஆகியவை பதிவு செய்து கொண்டனர்.

Related Stories: