நாலுமாவடியில் நாளை மறுநாள் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா

நாசரேத்: நாலுமாவடியில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா, நாளை மறுநாள் (7ம் ேததி) நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, நாலுமாவடி- நாசரேத் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

 இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகிக்கிறார். தமிழக சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகின்றனர். ஏற்பாடுகளை புதுவாழ்வு சங்க செயலாளர் டாக்டர் அன்பு ராஜன் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: