நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,692 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,658 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,88,091 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,512 பேர் குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34,33,299 ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,027 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1060 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 373, திருச்சியில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 16,765 தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: