மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவனை போலீசார் கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தால், சிறுமி 9 மாத கர்ப்பமானார். இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்தது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி சிறுமியை மீட்டு விழுப்புரம் சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார்.

பின்னர் சமூக நலத்துறை மூலம் புகார் பெறப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Stories: