மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!

மயிலாடுதுறை: மதுபோதை தலைக்கேறி, மகனை பீர் பாட்டிலால் கிழித்த கணவனை, மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது. மணல்மேடு அடுத்த கொற்கை கிராமத்தை சேர்ந்த மகாதேவன், மதுபோதையில் அவரது மனைவி அமுதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த மகாதேவன், 3 மாதங்களுக்கு முன்பு அடித்து துன்புறுத்தி மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகாதேவன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தாயை அடித்து துன்புறுத்தியதால், மகாதேவனை தடுக்க  அவரது மகன் ராஜராஜ சோழன் முயன்றுள்ளார். அப்பொழுது தனது கையில் இருந்த மதுபாட்டிலை உடைத்த மகாதேவன், எதிரே இருந்த மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த அமுதா அரிவாளால் மகாதேவனின் கழுத்தில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மகனுடன் மணல்மேடு காவல்நிலையத்திற்கு சென்ற அமுதா, கணவனை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.

Related Stories: