நுபுர் சர்மா மீதான கண்டன விவகாரம் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்

புதுடெல்லி: நுபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில், அதனை விமர்சித்த நபர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு ஜெய்சுகின் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் தலைமையிலான அமர்வு, அவரது சர்ச்சை கருத்துக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. நீதிபதிகளின் கண்டன கருத்துக்கு பாஜகவை சேர்ந்த சிலர் மற்றும் சில பிரபலங்கள் எதிர் கருத்துகளை தெரிவித்தனர்.

 அந்த வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.என்.திங்கரா, மூத்த வக்கீல்கள் அமன் லோக்தி, ராம்குமார் ஆகியோர், ‘நீதிபதிகளின் கருத்தானது அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று தெரிவித்தனர். இவ்வாறாக மேற்கண்ட மூவரும் கூறிய கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி மேலும் சிலர் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் வக்கீல் ஜெய்சுகின் என்பவர் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நீதிபதிகளின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது தவறு; அரசியலமைப்பு முறைக்கு எதிரானது.

வழக்கு விசாரணையின் தன்மை அடிப்படையிலேயே நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.என்.திங்கரா, மூத்த வக்கீல்கள் அமன் லோக்தி, ராம்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

Related Stories: