கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து போராட்டம்: கரித்தூளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக புகார்

கரூர்: கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து, சுற்றுவட்டார மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் அடுத்த புகழூரில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் EIT பாரி சர்க்கரை ஆலையை சுற்றியுள்ள கிராமமக்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்கள், காற்றில் கலந்து குடியிருப்பு பகுதிகளில் விழுவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஆஸ்துமா, சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வாய்க்காலில் கலப்பதால் நோய்த்தொற்று அபாயம் நிலவுவதாகவும் குற்றம்சாட்டி, ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், அரவக்குறிச்சி டி.எஸ்.பி. முத்தமிழ் செல்வன், வேலாயுதம்பாளையம் போலீசார் வட்டாட்சியர் மோகன்தாஸ் ஆகியோர் சமாதான பேச்சு நடத்தினர். இதையடுத்து 2 மணிநேர பி[போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.         

Related Stories: