கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் சேறும், சகதியுமான சாலை- தொற்று நோய் பரவும் அபாயம்

காலாப்பட்டு : புதுவை அடுத்த தமிழக பகுதியான மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரூக்கர் தெரு, மேட்டுத்தெரு, கொட்டக்கார் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் எப்போதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் தினமும் சேற்றில் நடக்க வேண்டியுள்ளது. சேற்றில் கொசுக்கள் பெருகுவதால் இப்பகுதியினர் சரியாக தூங்க முடிவதில்லை. மேலும் இதனால் இப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.  

எனவே இப்பகுதி மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைப்பதற்கு உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: