பேருந்து படியில் மாணவர்கள் பயணம்-போலீசார் எச்சரிக்கை

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல பெரும்பாலும் அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். அப்படி செல்லும் மாணவர்கள் தினந்தோறும் பேருந்து படியில் தொங்கியபடி செல்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமரராஜா தலைமையில் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் கூடுதல் பேருந்துகளை  வரவழைத்து மாணவர்களை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன், தொடர்ந்து இதுபோன்று அதிக பயணிகளை ஏற்றினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

Related Stories: