புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளை விட்டு அவற்றை விவசாயிகள் மேயவிடுவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் செட்டியாபட்டி, கீரமங்கலம், மாண்டங்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் மலர்சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களாக பூக்களுக்கு விலை கிடைப்பது இல்லை. குறிப்பாக அதிகம் விளையும் சென்டி பூக்கள் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையே விற்பனையாகிறது.

இதேபோன்று சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.20-க்கும் விற்பனையாகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் அவற்றை பறிக்காமல் கால்நடைகளுக்கு உணவாக, அதனை மேயவிடுகின்றனர். சாகுபடிக்கு ஆகும் செலவுக்கு கூட பணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே மலர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முறையான ஏற்றுமதி வசதி மற்றும் நிர்ணய விலை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.       

Related Stories: