கலவை பேரூராட்சியில் தார் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு-பொதுமக்கள் அச்சம்

கலவை : கலவை பேரூராட்சியில் தார் சாலையில் நேற்று  திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்குட்பட்ட 10 வார்டு லப்பைக் தெரு உள்ளது. இப்பகுதியில்  நேற்று திடீரென தார் சாலையில் நடுவில் ஒன்றரை  அடியில் பள்ளம் விழுந்தது. இதனால் அப்பகுதியினர்  அதிர்ச்சி அடைந்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர் ம.வெங்கடேஷ், பேரூராட்சி மன்றத் தலைவர் கலாசதீஷ், விரைந்து  சம்பவ பகுதிக்குச் சென்று சுமார் 10 அடி நீளமுள்ள கட்டையை எடுத்து பள்ளத்தில் விட்டுசோதனை செய்தபோது, புதைகுழி போன்று உள்ளே கொம்பு சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு 4 அடி அகலம், 4 அடி நீளமாக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர்  புதை குழி போல பள்ளம் விழுந்தது. சுமார் 12 அடி ஆழம் வரை தோண்டினர். பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் ம. வெங்கடேஷ்,  போர்க்கால அடிப்படையில்  தூய்மை  பணியாளர்களை பேரூராட்சி டிராக்டர் மூலம் பள்ளத்தில் முரம்பு மண்ணைக் கொட்டி பள்ளத்தை சமன் செய்தனர்.

அப்போது பேரூராட்சி கவுன்சிலர்கள் நித்யா சக்தி, யுவராஜ், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் அரங்கநாதன், குடிநீர் பராமரிப்பாளர் சீனிவாசன், மின் பணியாளர்  முரளிகிருஷ்ணன், கணினி இயக்குபவர் ராஜாராமன் மற்றும் திறமையை பணியாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.  இந்த திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: