பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார்.: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார் என்று சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதனையடுத்து பேசிய அவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்துள்ளார் நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் என குற்றம் சாட்டினார்.

சட்டதிட்டங்களின் படி அதிமுக பொதுக்குழு முறையாக நடைபெற்று என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.  மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை எடப்பாடி பழனிசாமி விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தவர். அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி வரும் 11-ம் தேதி நடைபெறும் என ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்-யை  திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். மேலும் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் நிறைந்திருந்தனர் என அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: