இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 2 குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள் வாழ வழியின்றி தொடர்ச்சியாக படகு மூலம் தமிழகம் வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே இலங்கையில் இருந்து வந்த 28 குடும்பத்தினர் சேர்ந்த 105 இலங்கை தமிழர்கள் அகதிகளாக அங்கிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்தநிலையில், அவர்களிட உரிய விசாரணை நடத்திய பின், மண்டபம் அகதி முகாமில் பதிவு செய்து, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர். இதையறிந்த மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலா ரூ.1 லட்சம் கொடுத்து படகு மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Related Stories: