சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி தேரோட்டம்

கடலூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து முடிந்தது. ஜூலை 1-ம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

தேரோட்டம்  2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை தொடங்கி பக்தர்களுடன் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் வலம் வந்தனர். மேலும் நாளை ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. அதனையடுத்து 7-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

Related Stories: