தெலுங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து 8 கிலோ தங்கம் கொள்ளை: போலீஸ் விசாரணை

தெலுங்கானா: நிசாமாபாத் மாவட்டதில் முகமூடி அணிந்து வந்து வங்கி லாக்கரை உடைத்து 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா கிராமிய வங்கியில் இருந்து ரூ.4.15 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வங்கியில் இருந்த அலாரத்தின் ஒயர்களை அறுத்தும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். வங்கி கொள்ளை குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: