“காளி“ கையில் சிகரெட்.. இந்துக் கடவுளை அவமதிக்கும் ஆவணப்படத்தை திரும்பப் பெறுங்கள்... இந்திய தூதரகம் அதிரடி!!

கனடா  : இந்து மத கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டு இருக்கும் காளி ஆவணப்படத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுளை அவமதிக்கும் காட்சி இருப்பதாக கேரளாவில் உள்ள இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் குவிந்து இருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே சர்ச்சைக்குரிய அந்த ஆவணப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி இருக்கும் காளி ஆவணப்படத்தின் போஸ்டர் மிகவும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகாகாளி சிகரெட் புகைப்பது போன்றும் ஒரு கையில் மாற்றுப் பாலின சமூகத்தின் கொடியை ஏந்தியபடி இருப்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி டொராண்டோவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலையை கைது செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: