மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மோட்டார் திருடிய 2 பேர் சிக்கினர்

தண்டையார்பேட்டை: மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மின் மோட்டாரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த கழிப்பறையில் இருந்த மின் மோட்டாரை 2 பேர் திருடியுள்ளனர். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த குமார், புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, 2 பேர் மோட்டாரை திருடுவது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (42) மகேஷ் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: