பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை: பத்திரப் பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பதிவுத்துறையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் உதவி பதிவுத்துறை தலைவர் பணியிட மாறுதல்களை  செய்யலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) டி.பி.சுரேஷ்குமார், சேரன்மகாதேவி மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சே.மு.மீரா மொஹிதீன், பெரம்பலூர் மாவட்ட பதிவாளராவும் (நிர்வாகம்), கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சி.ஸ்வீட்லின் பிளாரன்ஸ், மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), காத்திருப்போர் பட்டியலில் இருந்த மாவட்ட பதிவாளர் சத்தியமூர்த்தி, தர்மபுரி மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை), தென்காசி  மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கே.சுனிதா, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த மாவட்ட பதிவாளர் எஸ்.செந்தில்குமார், மதுரை தெற்கு இணை சார் பதிவாளராகவும் (மாவட்ட பதிவாளர் நிலையில்), சேரன்மகாதேவி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) எஸ்.பாக்கியம், தென்காசி மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), காரைக்குடி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) டி.லலிதா, நாமக்கல் மாவட்ட பதிவாளர் (தணிக்கை), பதிவுத்துறை தலைவர் அலுவலக மாவட்ட பதிவாளர் (சட்டம்) ஆர்.உத்தமசிங், சென்னை மாவட்ட பதிவாளர் (புலனாய்வு), காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் எம்.ராமச்சந்திரன் (தணிக்கை), காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் நிலையில்) என்.வெற்றிவேல், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மாவட்ட பதிவாளராகவும் (சட்டம்), நாகப்பட்டினம் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஏ.செந்தூர் பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை) மாற்றப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: