வேளாண் கழிவுகளை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிப்பு

சென்னை:  ஐஐடி மெட்ராஸ் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மடி கூறியதாவது: ஜவுளி, காகிதம், டிடர்ஜென்ட் சோப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி  உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்ஃபா-அமைலஸ், செல்லுலாஸ் போன்ற தொழில்துறை  நொதிகளுக்கு அதிகளவில் கிராக்கி இருந்து வருகிறது. வேளாண் கழிவுகளில்  இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை  உற்பத்தி செய்ய ‘பேசிலஸ் எஸ்பி பிஎம்06’ எனப்படும் பாக்டீரியா எவ்வாறு  உதவுகிறது என்பதை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த செலவில் லிக்னோசெல்லுலோசிக் கழிவுகளை முன்பதப்படுத்துதல் ஏதுமின்றி பிரிக்கும்திறன் கொண்ட உயிரியை நாங்கள் தனிமைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நொதிகளின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்சிதை மாற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் உயிரிச் செயலாக்கத்திற்கான செலவு குறையும். கரும்பாலைக் கழிவுகளில் இருந்து புதிய திரிபு ஒன்றைத் தனிமைப்படுத்துவதில் ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி கண்டுள்ளனர். கோதுமைத் தவிடு அதிகளவு பயன்தரக் கூடியதாகவும், அதற்கு அடுத்த நிலையில் ஜவ்வரிசிக் கழிவு, அரிசித் தவிடு ஆகியவை இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த முறை சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் அமைந்துள்ளது.

Related Stories: