உத்திரமேரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல்துறை சார்பில் உத்திரமேரூர் பஜார் வீதியில்  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் நிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பஜார் வீதியில் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களிடம் முகவசம் அணிய வலியுறுத்தி முககவசம் வழங்கப்பட்டது.

 

மேலும், தமிழக அரசு கொரோனாவிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்து கொள்ள முககவசம் கட்டாயம் அணியவேண்டும்.  தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது. எனவே, அரசின் வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணம் உள்பட நிகழ்வுகளில் கூட்டங்களை தவிர்த்து நிகழ்வினை எளிமையான முறையில் நடத்திட வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டனர். நிகழ்வின்போது, உத்திரமேரூர் காவல் நிலைய காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: