குடிபோதையில் சிதம்பரத்திலிருந்து தனியார் கல்லூரி பஸ்சை கடத்திய 2 பேர் கைது

கடலூர்: குடிபோதையில் சிதம்பரத்திலிருந்து, தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சை அதன் டிரைவர், கடந்த சனிக்கிழமை மாணவர்களை இறக்கி விட்டு, சிதம்பரம் உழவர் சந்தை அருகே இரவு 8 மணி அளவில் நிறுத்திவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் பஸ்சை எடுப்பதற்காக, டிரைவர் வந்துள்ளார். ஆனால் பஸ்சை காணவில்லை. இதனிடையே கடலூர் அருகே உள்ள சாவடி சோதனை சாவடி அருகே, அந்த கல்லூரி பஸ் நிற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது 2 பேர் அந்த பஸ்சில் ஏற முயன்றனர். உடனடியாக இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெரியசாமி (51), அஜித்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. குடிபோதையில் இருந்த போது, சிதம்பரத்திலிருந்து அந்த பஸ்சை கடத்தி வந்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: