காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறை நியமனங்களில் முன்னாள் துணை ராணுவப்படையினருக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், இனி முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டும்தான் அத்தகைய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த முடிவு தவறு. மழைநீர் வடிகால் பணிகள்: அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஒரே ஒரு குறுகிய சாலையில் வந்து, திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கு முன்பாக வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.பணிகள் முடியும் வரை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை வழங்கும்படி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்.

Related Stories: