நிதிஷ் கட்சி அமைச்சர் பாஜவில் இணைந்தாரா?

ஐதராபாத்:  ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஆர்சிபி சிங் பாஜவில் இணையவுள்ளதாக வெளியான தகவலை பாஜ மறுத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின்  மூத்த தலைவரும் எஃகு துறை ஒன்றிய அமைச்சருமான ஆர்சிபி சிங்  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சி வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது. எனவே, பதவிக்காலம் முடிந்ததும் அவர் அமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே அமைச்சர் இவர் மட்டும்தான். ஆனால், இவருக்கும் நிதிஷ் குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக அவர் அடுத்தகட்டமாக பாஜவில் இணையலாம் என கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே பீகாரிலும் ஒன்றியத்திலும் பாஜ-ஐஜத கூட்டணி அமைத்திருந்தாலும், இக்கூட்டணியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், ஆர்பி.சிங் பாஜவில் இணைந்தால் நிதிஷ்-மோடி இடையேயான விரிசல் இன்னும் அதிகமாகும். இந்நிலையில், ஐதராபாத்தில் பாஜவின்  தேசிய செயற்குழு  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்சிபி சிங்  பாஜவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின.இதனை பாஜவை சேர்ந்த பீகார் மூத்த தலைவர் சுசில் மோடி மறுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘ஆர்சிபி சிங் தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அவர் அரசு நிகழ்ச்சிக்காக ஐதராபாத் வந்தார். ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் அவருக்கு பாஜ தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்’ என்றார்.

Related Stories: