படிகட்டில் தவறி விழுந்து காயம் லாலு ஐசியுவில் அனுமதி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன முறைகேடு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுநீரக கோளாறு பிரச்னையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வீட்டில் இருந்த லாலு நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அங்கு விரைந்த குடும்ப மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக பாட்னா தனியார் மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: