மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி

சென்னை: இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் நடைபெற உள்ள (ஆக.12-21) மூத்த வீராங்கனைகளுக்கான (35வயதுக்கு மேற்பட்டவர்கள்) மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சென்னையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து செல்லும் மகளிர் ஹாக்கி அணியை, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன், திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி, இந்திய ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் சீதாராம ரியோ ஆகியோர் அறிமுகம் செய்து வைத்து வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘வீ ஆர் ஃபார் ஹாக்கி’ அமைப்பின் நிர்வாகிகள் ரேகா, லட்சுமி, திலகம், ஷீலா, தெரேசா. மெக்லிஷ், லட்சுமிபிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: