பாலக்காடு அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்: 16 வயது அண்ணன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 16 வயது அண்ணனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை வயிற்று வலி என்று கூறி அவரது பெற்றோர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மண்ணார்க்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு பழைய சாமான்கள் எடுக்க வந்த ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக  சிறுமி போலீசிடம் கூறினார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை இறங்கினர். விசாரணையில் சிறுமி கூறியது பொய் என்பது தெரியவந்தது. இதையடுத்து  சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சிறுமியை அவரது 16 வயது அண்ணன் தான் பலாத்காரம் செய்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனிடம் போலீசார்  விசாரணை நடத்தினர்.

இதில் தங்கையை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை அடைத்தனர். இதற்கிடையே சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் ஒரு குழந்தையை பிரசவித்தார். 13 வயது சிறுமியை 16 வயது அண்ணன் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் பாலக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: