மதுரையில் மாஜி அமைச்சர் உதயகுமார் கைது

திருமங்கலம்: திருமங்கலம் கப்பலூரில் அமைந்துள்ள டோல்கேட்டினை அகற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் திருமங்கலம் நகர் பகுதி வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளூர் வாகனங்களும் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமங்கலம் டிஎஸ்பி சிவக்குமார்  தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், அதிமுக நிர்வாகிகள் செல்வம் தமிழ்செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Related Stories: