எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கர்நாடக ஏடிஜிபி அம்ரீத் பால் கைது: சிஐடி போலீசார் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய பெரும்பாலானோர் இந்த தேர்வில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக தேர்வு எழுதிய 40 பேர் மற்றும் தேர்வு மையத்தை சேந்த 30 பேர் என 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த திவ்யா என்ற தலைவரும் கைது செய்யப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி காங்கிரசை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி போலீசார் எம்ரீத் பாலை கைது செய்தனர். தேர்வு முறைகேட்டில் அம்ரீத் பாலுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல் முறையாக பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: