மகாபாரத இதிகாசத்தை இயக்கிய பிரபல நாடக இயக்குனர் மரணம்

பாரீஸ்: பிரான்சில் பிறந்த பிரபல நாடக இயக்குனரான பீட்டர் புரூக், தனது 97வது வயதில் லண்டனில் காலமானார். இவரது மறைவுக்கு சர்வதேச அளவில் நாடகம், திரைத்துறையினர் மற்றுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 20ம் நூற்றாண்டின் மிகவும் திறமையான நாடக இயக்குனர்களில் ஒருவரான பீட்டர் புரூக், 90 வயதை கடந்தும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். கடந்த 1985ம் ஆண்டு அவர் ஒன்பது மணிநேரம் ஓடக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கினார்.

1970ம் ஆண்டில் அவர் பாரிஸில் தங்கியிருந்தபோது, நாடக ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தை நிறுவினார். நாடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நூல்களில் ஒன்றான ‘தி எம்ப்டி ஸ்பேஸ்’ என்ற நூலை  எழுதினார். லண்டனில் உள்ள யூத விஞ்ஞானிகளின் குடும்பத்தில் மார்ச் 21, 1925ல் பிறந்த பீட்டர் புரூக், 1970ம் ஆண்டு வாக்கில், பாரிஸுக்குச் சென்று பல நாடகங்களை இயக்கினார். மீண்டும் அவர் 1997ல் லண்டன் திரும்பினார். அவர் இயக்கிய பல நாடகங்களில் அவரது மனைவி நடாஷா பியாரி முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் 2015ம் ஆண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: