சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், கைது செய்யப்போட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, பின்பு சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 105 சாட்சிகளில் 30 பேர் மட்டுமே இதுவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 20 மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறோம். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது என்பது சட்டவிரோதமானது.

ஆகவே ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவானது இன்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ காவல்தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் அணுகி ஜாமீன் கோரிலாம்; ஜாமீன் வேண்டுமென்றால் கீழமை நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவை தள்ளுபடி செய்தது.       

Related Stories: