நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் ‘வாக்குறுதிகள்’ எதிர்ப்பு கூட்டம்; மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த விவசாயிகள்

காஜியாபாத்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் அனைத்து விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற்ற போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஒன்றி அரசு தனது வாக்குறுதியை முழுமையாக மறுத்துவிட்டது. குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயம் ெதாடர்பாக குழு அமைக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை.

மின்கட்டணம் ெதாடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ள சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய அரசின் விவசாயிகள் புறக்கணிப்பு நடவடிக்கையை கண்டித்து, வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி வருகிற 31ம் தேதி நாடு முழுவதும் மாவட்ட அளவில் வாக்குறுதி எதிர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படும். ஜூலை 31ம் தேதி சர்தார் உதம் சிங் தியாகி தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள பிரதான சாலையில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டங்கள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டங்கள் நடத்தப்படும்.

அக்னிபாதை திட்டத்தை எதிர்க்கும் வகையில், 7 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ‘ஜெய்-ஜவான் ஜெய்-கிசான்’ கூட்டங்கள் நடத்தப்படும். இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வேலையில்லாத இளைஞர்களும் கலந்து கொள்வார்கள் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் விவசாயத் தலைவர்கள் கூறுகையில், ‘லக்கிம்பூர் கேரி படுகொலை சம்பவம் நடந்து 10 மாதங்களுக்குப் பிறகும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ரா, அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது நாட்டின் சட்டம் ஒழுங்கை கேலி செய்யும் வகையில் உள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ஆகஸ்ட் 18, 19, 20ம் தேதிகளில் லக்கிம்பூர் கேரியில் 75 மணிநேர போராட்டம் நடத்தப்படும். இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் 15 மாநிலங்களில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்’ என்றனர்.

Related Stories: