திருப்பதி நகர தூய்மைக்கு துப்புரவு ஊழியர்களின் சேவை போற்றத்தக்கது-எம்எல்ஏ பேச்சு

திருப்பதி :  திருப்பதி நகர தூய்மைக்கு துப்புரவு ஊழியர்களின் சேவை போற்றத்தக்கது என எம்எல்ஏ கருணாகர ரெட்டி கூறினார்.திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதாள வடிகால் பணியாளர்களுக்கு சிறப்பான சேவையை பாராட்டி அனைவருக்கும் பரிசாக குக்கர், ரெயின்கோட், ரேடியம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஜாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி, மாநகராட்சி மேயர் சிரிஷா, ஆணையாளர் அனுபமா அஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏ கருணாகர ரெட்டி பேசுகையில், மண்ணின் மைந்தர்களாகிய துப்புரவு பணியாளர்களுக்கு தலை வணங்குகிறோம். திருப்பதி நகருக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் போதும் இங்குள்ள பொதுமக்களின் சுகாதாரத்திற்காக நகரை  தூய்மையாக வைத்திருப்பதில் உங்களது பங்கு போற்றத்தக்கது.

குறைந்த சம்பளத்தில் மிக சிறப்பாக சேவைகள் செய்யும்  மாநகராட்சி ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நாங்களும் உங்களுடன் இருப்போம்.

துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. நகரத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் தொடர்ந்து உழைத்து வரும் தொழிலாளர்களின் நலம் குறித்து பேரவை கூட்டத்தில் விவாதித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories: