பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-விசைப்படகில் உற்சாக பயணம்

இடைப்பாடி : இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் விசைப்படகில் உற்சாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள 12ஆயிரம் கனஅடி தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்கிறது.

பூலாம்பட்டி நீர்மின் தவணையில், கடல்போல் தண்ணீர் தேக்கப்படுவதால் விசைப்படகு போக்குவரத்து நடக்கிறது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள், விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையின் வழியாக, தண்ணீர் நுங்கும் நுரையுமாக பீறிட்டு வெளியே செல்வதை, பாலத்தின் மேல் நின்று சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோல், மாட்டுக்கார பெருமாள் கோயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து கொண்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: