குடவாசல் பேரூராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளால் மக்கள் அச்சம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வலங்கைமான் : குடவாசல் பேரூராட்சி உட்பட்ட பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்து வகையில் சாலையில் சுற்றி தெரியும் குதிரைகளை பிடித்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடவாசல் பகுதியில் சுற்றி திரியும் இந்த குதிரைகளால் அடிக்கடி விபத்துகளும் பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகிறது.

மேலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வீதிகளில் சுற்றித் திரியும் குதிரைகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்ற கோரிக்கையுடன் கடந்த வாரம் வர்த்தககள் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனு மீது எந்தவித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படாததால் தெருக்களில் சுற்றி தெரியும் குதிரைகளால் தினந்தோறும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் இடைஞ்சலாகவும் விபத்தும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பாக திருவாரூர் கடை வீதியில் இதுபோல் மாடுகள் சுற்றி திரிந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மாடு மோதி அவர் இறந்து போனார்.

அப்போது சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் வகையில் கால்நடைகளை வீதியில் விடும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு உள்ள நிலையில் இதேபோல் பல இடங்களில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன.ஆகவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குடவாசல் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: