அரூர் சுற்றுவட்டாரத்தில் நிலக்கடலை அறுவடை மும்முரம்

அரூர் : அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு பயிரிப்பட்ட நிலக்கடலை தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. புன்செய் பயிராக பயிரிப்படும் நிலக்கடலை, நீர்வளம் அதிகம் உள்ளதால் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஏக்கருக்கு 20 மூட்டை வரை விளைச்சல் கிடைத்துள்ளது. அத்துடன் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 3 மாதத்திற்கு முன் பயிரிட்ட நிலக்கடலை, தற்போது பறிப்பு பருவத்திற்கு வந்துள்ளது. அதிக ஈரப்பதத்தால் அதிக நிலக்கடலை பிடித்துள்ளது. செடி ஒவ்வொன்றிலும் அதிக நிலக்கடலை பிடித்துள்ளது. வரும் நாட்கள் மழை காலம் துவங்க உள்ளதால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,’ என்றனர்.

Related Stories: