கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

சென்னை: சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பலகோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி மற்றும் சென்னையில் துறைமுகங்கள் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இந்த துறைமுகங்களுக்கு வரும் நிலக்கரி, கட்டுமான பொருட்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதேபோல, பல்வேறு மாநிலங்களில் இருந்து சரக்குகள் ஏற்றிவரப்பட்டு, துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், 80% லாரி வாடகை உயர்த்தி தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி, கண்டெய்னர் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று களைய முதல் லாரிகளை இயக்க மறுத்து, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் செயல்படும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவதற்கு அதிக பணம் வசூலிப்பதாகவும், இதனால் பெருமளவு இழப்பு ஏற்படுவதாகவும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக கண்டெய்னர் லாரிகள் துறைமுகம் செல்லும் சாலையில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.     

Related Stories: