நள்ளிரவில் பரபரப்பு புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், மாவட்ட காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் பல லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரத்திலிருந்து வளவனூர் மார்க்கமாக அதிவேகமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு சேர்ந்த தாரிப்அலி(35)., வாதானூரைச் சேர்ந்த சாதிக் பாஷா(38) என்பது தெரிய வந்தது.

 மேலும் விசாரணையில், தனியார் டிராவல்ஸ் மூலம் வெளி மாநிலத்திலிருந்து வந்த புகையிலை பொருட்களை வளவனூர் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: