திரிகூடபுரத்தில் ஆபத்தான மின்கம்பம்

கடையநல்லூர் : கடையநல்லூரை அடுத்த கருப்பா நதிக்கு செல்லும் வழியில் உள்ள கடம்பன்குளம் கால்வாய் அருகில் ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் இருந்து கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த சாலையில் தினமும் ஏராளமான விவசாயிகள் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடம்பன்குளம் கால்வாய் அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் கிணற்றிலிருந்து நீரேற்றம் செய்வதற்காக மின்சாரம் செல்கிறது. தற்போது அந்த டிரான்ஸ்பார்மர் அருகிலுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தில் செல்லக்கூடிய வயர்கள் அனைத்தும் தாழ்வாக உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: